/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர் பாதுகாப்பு மருந்துகள்: கையாள விவசாயிகளுக்கு பயிற்சி
/
பயிர் பாதுகாப்பு மருந்துகள்: கையாள விவசாயிகளுக்கு பயிற்சி
பயிர் பாதுகாப்பு மருந்துகள்: கையாள விவசாயிகளுக்கு பயிற்சி
பயிர் பாதுகாப்பு மருந்துகள்: கையாள விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : மார் 01, 2024 10:22 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்துறை சார்பில், பயிர் பாதுகாப்பு மருந்துகள் கையாளும் முறை குறித்து, விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.
அட்மா திட்டத்தின் சார்பில், துடியலுாரில் உள்ள டியூகாஸ் வளாகத்தில் நடந்த பயிற்சி முகாம் நிகழ்ச்சிக்கு அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
இதில், துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால், பேசுகையில் 'பயிர் பாதுகாப்பு மருந்துகள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதனால், மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டு, பயிர்களில் நச்சுத்தன்மை அதிகமாகிறது. அதை உணவாக உட்கொள்ளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பயிர் சாகுபடி செலவும் அதிகமாகிறது. இதனால், விவசாயிகளின் வருமானம் குறைகிறது,' என்றார்.
வேளாண் அலுவலர் கோமதி பேசுகையில், 'பயிர் பாதுகாப்பு மருந்துகள் நான்கு வகையாக உள்ளது. இதை அடையாளம் காண மருந்து பாட்டில்களில் முக்கோண வடிவில் வண்ணம் இருக்கும். அதாவது, சிவப்பு நிறம் அதிக நச்சுத்தன்மை உடையது.
அதிக பாதிப்பு ஏற்படுத்தும். மஞ்சள் நிறம் நச்சுத்தன்மை உடையது. பாதிப்பு ஏற்படுத்தும். நீல நிறம் சுமாரான நச்சுத்தன்மை உடையது. பச்சை நிறம் குறைந்த நச்சுத்தன்மை, பாதிப்பு குறைவு. எனவே, சிவப்பு நிற முக்கோணம் உள்ள மருந்துகளை தவிர்க்க வேண்டும், அதை பாதுகாப்பாக கையாள வேண்டும்,'' என்றார்.
விவேகானந்தபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய இளநிலை ஆராய்ச்சியாளர் துரைசாமி, மருந்து தெளிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். பயிற்சி முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் ரமேஷ், சையது நுார்முகமது, சித்ரா, அனுராதா, ஜனனி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மகேந்திரன், தினகரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

