/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., கருவியுடன் தராசு இணைக்க பயிற்சி
/
ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., கருவியுடன் தராசு இணைக்க பயிற்சி
ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., கருவியுடன் தராசு இணைக்க பயிற்சி
ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., கருவியுடன் தராசு இணைக்க பயிற்சி
ADDED : மே 14, 2025 11:51 PM

அன்னுார்; மின்னணு எடை தராசுடன், பி.ஓ.எஸ்., கருவியை இணைக்க, ஊழியர்களுக்கு அன்னுாரில் நேற்று பயிற்சி நடந்தது.
அன்னுார் தாலுகாவில், 73 முழு நேர ரேஷன் கடைகளும், 14 பகுதிநேர ரேஷன் கடைகளும் உள்ளன. 66 ஆயிரத்து 200 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக உள்ளதாக புகார் வந்த வண்ணம் உள்ளது.
இதை தடுக்க, தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மின்னணு எடை தராசும், பி.ஓ.எஸ்., கருவியும், 'வைபை' மற்றும் 'புளூடூத்' வாயிலாக இணைக்கப்பட உள்ளது.
இதையடுத்து ஊழியர், தராசில் எவ்வளவு பொருள் வைக்கிறாரோ, அந்த எடை தான் பி.ஓ. எஸ்., கருவியில் பதிவு செய்யப்படும். இதனால் பொதுமக்களுக்கு எடை குறைவாக பொருள் வழங்கப்படுகிறது என்கிற புகார் இருக்காது.
இதற்கு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகுப்பு அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள குடிமை பொருள் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பயிற்சிக்கு குடிமை பொருள் தாசில்தார் ஜெயபாரதி தலைமை வகித்தார். கூட்டுறவு சார் பதிவாளர் சாந்தாமணி மற்றும் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். மிக எளிதாக பி.ஓ.எஸ்., கருவியையும் மின்னணு எடை தராசையும் இணைக்கலாம் என தெரிவித்தனர். பயிற்சி வகுப்பில், ரேஷன் கடை விற்பனையாளர்கள், குடிமை பொருள் அலுவலர்கள் பங்கேற்றனர்.