UPDATED : நவ 25, 2026 09:46 PM
ADDED : நவ 25, 2026 09:46 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி ஊழியர்களுக்கு மன அழுத்தம் குறைப்பதற்கான நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடந்தது.
இதன் மூலம் மனநலனை மேம்படுத்தி, பணிச்சூழலில் மன அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மன அழுத்தத்தை அடையாளம் கண்டு மீண்டு வரவும், நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மன அமைதிக்கான பயிற்சியும் வழங்கினர். மாநகராட்சியின் அனைத்து பிரிவு ஊழியர்கள் பங்கேற்றனர்.
