/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு
/
அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு
ADDED : ஜூன் 10, 2025 09:52 PM
கோவை; பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும், அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் 2025 - 26 கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி, பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, இன்று வரை இணையவழியில் நடைபெறுகிறது.
இவற்றில் கண்காணிப்பாளர்களுக்கு, மாவட்டத்துக்குள் பணி மாறுதல் முடிவடைந்த நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு, விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதன்படி, கோவையில் நடைபெற்ற பணிமாறுதல் கலந்தாய்வில் 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.