ADDED : மார் 06, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்;நெகமம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், நெகமம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சென்னை க்ரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் பங்களாபுதுார் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரவி, நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.

