/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தாசில்தார்களுக்கு பதவி உயர்வுடன் இடமாறுதல்
/
கோவை தாசில்தார்களுக்கு பதவி உயர்வுடன் இடமாறுதல்
ADDED : ஜன 29, 2024 12:32 AM
கோவை:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் இட மாறுதல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, அதிகாரிகள் வெவ்வேறு பதவிகளுக்கும், நகரங்களுக்கும் மாற்றப்பட்டு வருகின்றனர். அதேநேரம், தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது.
* திருச்சி மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிந்த முத்துசாமிக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, கோவை கலெக்டரின் நேர்முக உதவியாளராக (சட்டப்பணிகள்) நியமிக்கப்பட்டுள்ளார்.
* கோவையில் தாசில்தாராக பணிபுரிந்த சுந்தரராமன், துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு இ-சேவை முகமைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
* தாசில்தார் பக்தவத்சலத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் வட்டம் பரந்துாரில் உள்ள நிலம் எடுப்பு பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கோவை மாவட்ட முன்னாள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவகுமாரி, தர்மபுரியில் கலால் பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு துறைகளில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே பணியிடத்தில் வேலை பார்க்கும் அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாறுதல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.