/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரான்ஸ்பார்மர் பழுது; பொதுமக்கள் பாதிப்பு
/
டிரான்ஸ்பார்மர் பழுது; பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2025 09:47 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் பாதித்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி தனியார் கல்லூரி அருகே வளைவு பகுதியில் ரோட்டோரம் உள்ள டிரான்ஸ்பார்மர் வாயிலாக, அப்பகுதி விவசாயிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பழுதடைந்ததால், அப்பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள், விவவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விரைவில் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அப்பகுதியில் இருந்த மற்றொரு வழித்தடத்தில் இருந்து, 'சிங்கிள் பேஸ்' மின் வினியோகம் வழங்கப்பட்டது.
ஆனால், இங்குள்ள விவசாய இணைப்புகளுக்கு, மும்முனை மின்சாரம் வழங்காததால், நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசிக்கின்றனர். டிரான்ஸ்பார்மர் பழுதால், வேறொரு இணைப்பில் இருந்து தற்காலிகமாக வீட்டு உபயோகத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில், கிணறு கிடையாது அதற்கு மாற்றாக போர்வெல் மட்டுமே உள்ளது. கால்நடைகளும் விவசாயிகள் வளர்க்கின்றனர்.
விவசாய பயன்பாட்டிற்கு மின்வினியோகம் இல்லாததால், கால்நடைகள் மற்றும் விளை நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்னையை சரி செய்ய, 10 முதல் 15 நாட்கள் ஆகும் என, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, தாமதமின்றி டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.