/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விளக்க கூட்டம்
ADDED : ஜன 08, 2024 10:55 PM
அன்னுார்:அன்னுார் அரசு போக்குவரத்து கழக கிளை முன் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து இரண்டு ஆண்டுகளாக அரசிடம் மனு அளித்து வந்தனர். எனினும் கோரிக்கைகள் நிறைவேறாததால் 9ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்த விளக்கக் கூட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் நடந்தது. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில், 'ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. பலமுறை நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்,' என்றனர்.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.