/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
/
மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 13, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, சிட்கோ மேம்பாலம் அடுத்து, கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று மாலை, 6:20 மணியளவில் பங்க் அருகிலுள்ள மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
சிட்கோ நோக்கி வாகனங்கள் வருவது பாதிக்கப்பட்டது. அவ்வழியே வந்த போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் அங்கிருந்தோர் உதவியுடன் மரத்தை அகற்ற முயன்றும் முடியவில்லை. அங்கு வந்த சிலர், துரிதமாக செயல்பட்டு அரிவாளால் கிளைகளை வெட்டி அகற்றினர்.
இதையடுத்து வாகனங்கள் சிரமமின்றி சென்றன. போலீசாரின் இந்நடவடிக்கையை அங்கிருந்தோர் பாராட்டினர்.

