/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : செப் 15, 2025 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் என்.எஸ்.எஸ்., இயக்கம், மாணவர், பெற்றோர் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் லலிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு நெய்தனர்.