/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
/
மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 09, 2025 10:21 PM

அன்னுார்; அன்னுாரில், ஓதிமலை சாலையில், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அவிநாசியில் இருந்து கருவலுார், அன்னுார், பொகலுார் வழியாக, மேட்டுப்பாளையம் வரை, 38 கி.மீ., துாரத்திற்கு, நான்கு வழிச்சாலை அமைக்க 238 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலை அகலப்படுத்தும்போது 1342 மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. 200க்கும் மேற்பட்ட மரங்கள் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு கூடுதலாக ஐந்து மடங்கு மரங்கள் நடப்பட வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் 400 மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளன. அரசு, வேம்பு, பைன், புளி, புங்கன் ஆகிய ரகங்களைச் சேர்ந்த மரக்கன்றுகள் கடந்த இரண்டு நாட்களாக ஓதிமலை ரோட்டில் நடப்பட்டு வருகின்றன.
மரக்கன்றுகள் காற்று மற்றும் கால்நடைகளால் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றிலும் பாதுகாப்புக்காக சிறு கம்புகள் நடப்பட்டு துணி சுற்றப்படுகிறது. இதனால் நடப்படும் மரக்கன்றுகள் பாதிப்பு இல்லாமல் முழுமையாக வளரும் வாய்ப்புள்ளது என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.