/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குன்னுாரில் கனமழை முறிந்து விழுந்தன மரங்கள்
/
குன்னுாரில் கனமழை முறிந்து விழுந்தன மரங்கள்
ADDED : நவ 04, 2024 11:27 PM

குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுாரில், இரு நாட்களாக நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் சாலை, காட்டேரி, குரும்பாடி, காட்டேரி, பழைய அருவங்காடு, சப்ளை டிப்போ, வண்டிச்சோலை பகுதிகளில் மரங்கள் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுார் தீயணைப்பு வீரர்கள், கொட்டும் மழையில் போராடி, மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின், மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதேபோல, குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரி அருகே பந்துமை, கோத்தகிரி சாலையில், விழுந்த ராட்சத கற்பூர மரத்தை கன்டோன்மென்ட் வாரிய பொக்லைன் உதவியுடன் தீயணைப்பு துறையினர், ராணுவத்தினர், தன்னார்வலர்கள் அகற்றினர்.
கிரேஸ் ஹில் பகுதியில், 30 அடி உயரத்தில் தனியார் அமைத்த புதிய சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அருகில் இருந்த புஷ்பராணி என்பவரின் வீடும் பாதித்தது. இதேபோல, பல இடங்களிலும் சாலை ஓரங்களில் ஏற்பட்ட மண்சரிவு பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டது.