/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுரோட்டில் நின்ற அரசு பஸ்சால் அவதி
/
நடுரோட்டில் நின்ற அரசு பஸ்சால் அவதி
ADDED : ஜூலை 23, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, சிவானந்தா காலனியில் நேற்று முன் தினம் இரவு காந்திபுரம், புலியகுளம், ராமநாத புரம், டவுன்ஹால் வழியாக சிவானந்தா காலனி செல்லும் டவுன் பஸ் சென்றது.
பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். சிவானந்தா காலனி பகுதியில் சென்ற போது, பஸ் திடீரென நின்றது. டிரைவர் பலமுறை முயன்றும், பஸ் இயங்கவில்லை. பேட்டரியில் இருந்து வரும் மின்சாரம், சரியாக சப்ளை ஆகாததால், பஸ் நின்றது தெரிந்தது. இதனால் பயணிகள் பஸ்சுக்குள் தவித்தனர். வேறு வழியின்றி இறங்கி பஸ்சை தள்ளினர். நீண்ட நேரம் முயற்சித்தும், பஸ் 'ஸ்டார்ட்' ஆகவில்லை. இதன் பின், அனைத்து பயணிகளும் அவ்வழியாக வந்த வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.