/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.வி.எஸ். மோட்டார்ஸ் சார்பில் நவீன இருசக்கர வாகனம் அறிமுகம்
/
டி.வி.எஸ். மோட்டார்ஸ் சார்பில் நவீன இருசக்கர வாகனம் அறிமுகம்
டி.வி.எஸ். மோட்டார்ஸ் சார்பில் நவீன இருசக்கர வாகனம் அறிமுகம்
டி.வி.எஸ். மோட்டார்ஸ் சார்பில் நவீன இருசக்கர வாகனம் அறிமுகம்
ADDED : நவ 08, 2025 01:12 AM

கோவை: டி.வி.எஸ்.மோட்டார்ஸ் நிறுவனம், புதிய ஆர்பிட்டர் மின்சார இருசக்கர வாகனத்தை கோவையில் நேற்று, அறிமுகம் செய்தது.
மின்வாகனம் பற்றி, ஈவி வாகன மார்க்கெட்டிங் பிரிவு துணை பொது மேலாளர் ரிஷூகுமார் பேசியதாவது:
நகர்ப்புற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், அலுவலகம் செல்வோருக்கும் பயனுள்ளதாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம், டிவிஎஸ் - ஆர்பிட்டர் மின்சார வாகனத்தை, அறிமுகம் செய்துள்ளது.
ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், 158 கி.மீ., துாரம் வரை செல்ல முடியும். பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்கள், இந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ளன. இரு சக்கர வாகன தொழிலில் முதல்முறையாக, 14 இன்ச் முன் சக்கரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இருவர் சவாரி செய்ய, 845 மி.மீ., நீண்ட இருக்கை வசதி, இதன் அடியில் 34 லிட்டர் சேமிப்பகத்தில் இரண்டு ஹெல்மெட்டுக்களை வைத்து பாதுகாக்க முடியும்.
விபத்து, கீழே விழுதல், திருட்டு எதிர்ப்பு, ஜியோ பென்சிங், டைம் பென்சிங் எச்சரிக்கை அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. நாம் துாரத்தில் இருந்தாலும், பேட்டரியின் அளவு, ஓடோமீட்டரை கண்காணிக்க முடியும். வாகனத்தில் செல்லும்போது அடுத்த திருப்பம் முதல் செல்லும் பாதைகளை வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
மொபைல் போன் அழைப்புகளை எல்சிடி டிஜிட்டல் கிளஸ்டரில் இணைத்தால், குறுந்தகவல்கள், அழைப்புகளை அறிய முடியும். மலைப்பகுதியில் செல்லும்போது பாதுகாப்பாக உணர உதவிகள், வாகனம் ஓட்டும் கட்டுப்பாடுகள் உள்ளன.
நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ரோடோஸ் ப்ளு, லுானார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம், மார்ஷியன் காப்பர் போன்ற வண்ணங்களில் இந்த வாகனம் புதுமை படைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ.1,03,100 முதல் உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

