/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் கமிஷனர் ஆபிஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
/
போலீஸ் கமிஷனர் ஆபிஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் கமிஷனர் ஆபிஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
போலீஸ் கமிஷனர் ஆபிஸ் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : நவ 08, 2025 01:12 AM
கோவை: கோவை போலீஸ் கமிஷனர் ஆபிஸ் முன், கெரசின் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், துடியலுார் அருகேயுள்ள புதுமுத்து நகரை சேர்ந்த தம்பதியின் மகள், உறவினரை காதல் திருமணம் செய்து கொண்டு மாயமானார். காரமடை போலீசில் தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
சென்னைக்கு சென்று, நண்பர்கள் உதவியுடன் தங்கி இருப்பதாக கூறப் படுகிறது. மகளை மீட்டு தரும்படி தாய் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் காதல் தம்பதியர் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பெண்ணின் தாயார், கெரசின் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்தனர்.
ரேஸ்கோர்ஸ் போலீசார், பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.