/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ்காரர் மீது தாக்குதல் இருவர் கைது
/
போலீஸ்காரர் மீது தாக்குதல் இருவர் கைது
ADDED : நவ 11, 2024 05:18 AM
கோவை: சென்னை மதுரவாயல் ஏரிக்கரை அருகே உள்ள பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழ் முரசு, 30. இவர் தாம்பரம் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவ விடுப்பில் உள்ள இவர் தனது உறவுக்கார பெண்ணுடன் கடந்த, 8ம் தேதி காரில் கோவை வந்தார்.
இங்கு ஈஷா யோகா மையம் சென்று விட்டு, அவிநாசி ரோடு வழியாக சிங்காநல்லுார் சென்று கொண்டிருந்தார். லட்சுமி மில் அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த இருவருடன், தமிழ் முரசுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், தமிழ் முரசின் காரை வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவுக்கார பெண், அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவரும், அந்த பெண்ணையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தமிழ் முரசு ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். தமிழ் முரசை தாக்கியது, டிராவல்ஸ் உரிமையாளர் சதீஷ், 35, அவரது நண்பர் பிரதீப், 36 எனத் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.