/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா விற்ற இருவர் காருடன் கைது
/
கஞ்சா விற்ற இருவர் காருடன் கைது
ADDED : ஜூலை 25, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; கோவில்பாளையம் போலீசார், லட்சுமி கார்டன் பகுதியில் சோதனை நடத்தினர். காரில் வந்த இருவரிடம் சோதனை செய்த போது, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பிடிபட்டது.
கஞ்சா கடத்தியவர்கள், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த நேரு, 20. கீரணத்தம், சாம்பிராணி குட்டையை சேர்ந்த சுதர்சன், 20. ஆகியோர் என தெரிய வந்தது. எஸ் .ஐ., மோகன் தாஸ், இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தார். இருவரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் நேரு மீது ஏற்கனவே சரவணம்பட்டி மற்றும் கரூரில் வழக்குகள் உள்ளன. சுதர்சன் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.