/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது
ADDED : செப் 05, 2025 10:16 PM
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை அருகே காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கண்ணண், 85. இவரது மனைவி சுந்தராம்மாள், 65. இந்த தம்பதியினர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டின் உள்ளே மதுபோதையில் அத்து மீறி இரண்டு இளைஞர்கள் நுழைந்தனர். பின் வயதான தம்பதியினரை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கேட்டனர். பின் அவர்களை தாக்கி, மூதாட்டியின் தங்க கம்மலை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
காரமடை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், போலீசார் விசாரித்ததில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 30, பெயிண்டர், மனோஜ்குமார், 31, டிரைவர் என தெரியவந்தது. இவர்கள் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.----