/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லேப்டாப்புகள் திருட்டு இருவர் கைது
/
லேப்டாப்புகள் திருட்டு இருவர் கைது
ADDED : ஏப் 19, 2025 03:14 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் பி.கே., ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஏழு லேப்டாப்புகள் திருட்டு போய் இருந்தன.
இது குறித்து நிறுவனத்தின் பொது மேலாளர் ராமச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், அதே நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் தனசீலன், 24, இந்நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றிய மதுரை மாவட்டம் ஊத்தங்குடி சேர்ந்த வைரமுத்து,35, ஆகியோர் இத்திருட்டுகளை நடத்தியது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து, லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.