/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழக மறுத்த கள்ளக்காதலி கொலை கள்ளக்காதலன் உட்பட இருவர் கைது
/
பழக மறுத்த கள்ளக்காதலி கொலை கள்ளக்காதலன் உட்பட இருவர் கைது
பழக மறுத்த கள்ளக்காதலி கொலை கள்ளக்காதலன் உட்பட இருவர் கைது
பழக மறுத்த கள்ளக்காதலி கொலை கள்ளக்காதலன் உட்பட இருவர் கைது
ADDED : ஜன 16, 2025 04:17 AM
கோவை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள், 40; டிரைவர். மனைவி கலைத்தாய், 33. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் கோவை வந்து, துடியலுார் எஸ்.எம். நகரில் வசித்து வந்தனர். கலைத்தாய், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.
பிளாஸ்டிக் கம்பெனி உரிமையாளர் அரிச்சந்திரனுடன் கலைத்தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்தனர்.கலைத்தாய், அரிச்சந்திரனிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்று வந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன், ரூ.2 லட்சம் வாங்கினார். இதன் பின், வேலைக்கு செல்லவில்லை.
அரிச்சந்திரன் கேட்டதற்கு, சரியான பதில் கூறாமல் இருந்துள்ளார். அவரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். தனது மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார்.
கலைத்தாய் குறித்து அரிச்சந்திரன் விசாரித்த போது, அவர் வேறு ஒரு நபருடன் பழகி வருவது தெரியவந்தது. ஆத்திரமடைந்த அரிச்சந்திரன், கடந்த 14ம் தேதி தனது நண்பர் பிரசாத்தை, 30 அழைத்துக்கொண்டு, கலைத்தாய் வீட்டுக்கு சென்றார்.
கலைத்தாயிடம், பணத்தை திருப்பிக் கேட்டு தகராறு செய்தனர். ஆத்திரம் அடைந்த அரிச்சந்திரன், வீட்டில் இருந்த கத்தியால் கலைத்தாயை, சரமாரியாக குத்தி கொலை செய்தார். நண்பருடன் தப்பினார்.
இதன் பின், கலைத்தாயின் நண்பர் விக்னேஷ், கலைத்தாய் வீட்டிற்கு வந்தார்.
கலைத்தாய் கொலை செய்யப்பட்டிருந்ததை பார்த்து, துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அரிச்சந்திரன் மற்றும் பிரசாத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.