ADDED : ஜன 27, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பீளமேடு, காந்தி மாநகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 31. எலக்ட்ரீசியன். இரு தினங்களுக்கு முன் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மொபைல்போனுக்கு அழைப்பு வந்ததால் பைக்கை நிறுத்தினார்.
மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த இருவர் சத்தியமூர்த்தியின் மொபைல்போனை பறித்து தப்பினர். சரவணம்ப ட்டி போலீசார் விசாரணையில், கணபதி, எப்.சி.ஐ., காலனி, சீனிவாசன், 22, சிவா, 21 ஆகிய இருவரும் மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

