/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பலி; ஒருவர் காயம்
/
மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பலி; ஒருவர் காயம்
மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பலி; ஒருவர் காயம்
மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பலி; ஒருவர் காயம்
ADDED : டிச 24, 2024 07:29 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற மூவரில், வடமாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கல்லாபுரத்தைச் சேர்ந்த முருகசாமி, 43, தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். இவர், சொலவம்பாளையம் பகுதியில், நேற்று மாலை பைக் ஓட்டி சென்றார்.
அவருடன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அதுல்குமார், 23, உமேஷ்குமார், 25 ஆகியோரும் சென்றனர்.
மூவரும் ஒரே பைக்கில் சென்ற போது, சொலவம்பாளையம் ரோட்டின் ஓரத்தில் இருந்த அலங்காரக்கொற்றை மரத்தின் கிளை முறிந்து, பைக்கில் சென்றவர்கள் மீது விழுந்தது.
இதில், சம்பவ இடத்திலேயே அதுல்குமார், உமேஷ்குமார் உயிரிழந்தனர். முருகசாமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.