/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜீப் மோதி நடந்து சென்ற இருவர் பலி
/
ஜீப் மோதி நடந்து சென்ற இருவர் பலி
ADDED : டிச 16, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: ஜார்க்கண்ட் மாநிலம், கொய்கரா பகுதியை சேர்ந்தவர் படோர்கொடா, 18. ஒடிசா மாநிலம், கண்டோல்கர் பகுதியை சேர்ந்தவர் கோலேமுண்டா, 23. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியில் இருவரும் தங்கி, கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, இருவரும் பணி முடிந்து, வீடு நோக்கி, கருப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த, 'மஹிந்திரா பொலீரோ' ஜீப், அவர்கள் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.