/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணிக்கு இருவர் தேர்வு
/
ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணிக்கு இருவர் தேர்வு
ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணிக்கு இருவர் தேர்வு
ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணிக்கு இருவர் தேர்வு
ADDED : ஜன 28, 2025 07:50 AM

கோவை : ஆசிய பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணிக்கு, கோவை கல்லுாரி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி, சீனாவில் வரும் பிப்., 11 முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், வீரர் லக்சயா சென் தலைமையிலான ஆண்கள் மற்றும் பி.வி. சிந்து தலைமையிலான, பெண்கள் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கோவை, நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களான, சதீஷ்குமார், ஆத்யா வாரியாத் ஆகியோர், இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிய போட்டியில் சிறப்பாக விளையாட கல்லுாரி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.