/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாருக்கு கொலை மிரட்டல்; இளைஞர்கள் இருவர் கைது
/
போலீசாருக்கு கொலை மிரட்டல்; இளைஞர்கள் இருவர் கைது
ADDED : டிச 17, 2024 11:36 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், லாரி டிரைவரை தாக்கி, போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அமீர் ஹம்ஜா, 34. இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணி புரிகிறார். இவர் கடந்த 15ம் தேதி, மாலை மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், லாரியை இயக்கி உள்ளார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்தது. அதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்துல் சாகீர், 25, முகமது செமீர், 26, யாசர், 25, சதுார்தீன், 18 ஆகியோர் இருந்தனர்.
இதில், அப்துல் சாகீர், முகமது செமீர் ஆகிய இருவரும், லாரி டிரைவர் அமீர் ஹம்ஜாவை பார்த்து, லாரியை ஓரமாக ஓட்டி செல்ல மாட்டாயா என்று திட்டியுள்ளனர். பின் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. லாரி டிரைவரை கன்னத்தில் அறைந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாரையும், திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்த மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று, அப்துல் சகீர், முகமது செமீரை கைது செய்தனர். காருக்குள் இருந்த மற்ற இருவரை தேடி வருகின்றனர்.-