தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தனித்துவ எண் கட்டாயம் வேளாண்துறை அறிவிப்பு

தனித்துவ எண் கட்டாயம் வேளாண்துறை அறிவிப்பு

தனித்துவ எண் கட்டாயம் வேளாண்துறை அறிவிப்பு


UPDATED : நவ 06, 2026 07:41 PM

ADDED : நவ 06, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:41 PM ADDED : நவ 06, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: விவசாயிகள் மானிய உரங்களை பெற, தனித்துவ அடையாள எண் கட்டாயம் என, பெ.நா.பாளையம் வேளாண்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கி வந்த முறையில், மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதுவரை ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு விற்பனை முனை இயந்திரத்தில் விவரங்களை பதிவு செய்து, உரங்கள் வழங்கப்பட்டன.

இனி உழவர் தனித்துவ அடையாள எண் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர் மற்றும் பரப்பளவுக்கு ஏற்ற மானிய உரங்கள் வழங்கப்படும்.

பெ.நா.பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தனித்துவ அடையாள எண் பெற, உடனடியாக பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்களுடைய அனைத்து நிலங்களின் சர்வே எண்களை முழுமையாக இணைக்காதவர்கள் அருகிலுள்ள இ–-சேவை மையத்திலோ,வேளாண் அலுவலகத்திலோ சர்வே எண்களை இணைக்க வேண்டும் என, பெ.நா.பாளையம் வேளாண்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us