/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கும்மியாட்டத்தில் அசத்திய மகளிர்
/
கும்மியாட்டத்தில் அசத்திய மகளிர்
ADDED : ஜன 14, 2024 11:26 PM
அன்னுார்:குப்பேபாளையத்தில் நடந்த அரங்கேற்ற விழாவில், 300 பேர் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
நாட்டுப்புற கலையான கும்மியாட்டம், அன்னுார் சுற்றுவட்டாரத்தில் கற்பிக்கப்படுகிறது. குப்பேபாளையம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக, சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என 110 பேர், பல்லடம், அனுப்பப்பட்டி, வள்ளி முருகன் கலைக்குழுவிடம் கும்மி பயிற்சி பெற்றனர்.
நேற்று முன்தினம் இரவு, குப்பேபாளையம், மாரியம்மன் கோவில் வளாகத்தில் கும்மியாட்டம் நடந்தது. புதிதாக பயிற்சி பெற்ற 110 பேர், ஏற்கனவே அரங்கேற்றம் செய்த 200 பேர் என, 300க்கும் மேற்பட்டோர் கும்மியாட்டம் ஆடினர்.
நாட்டுப்புறப்பாடல், வள்ளி முருகன் திருக்கல்யாணம் குறித்த பாடல்களுக்கு மூன்று மணி நேரம் கும்மியாட்டம் ஆடினர். 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கும்மியாட்ட ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.