/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமசபை கூட்டத்தில் யு.பி.ஏ., திட்ட விளக்கம்
/
கிராமசபை கூட்டத்தில் யு.பி.ஏ., திட்ட விளக்கம்
ADDED : ஜன 28, 2025 06:13 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, தேசியக்கொடி ஏற்றினார்.
மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், தத்தெடுக்கப்பட்ட கிராமங்களான சுப்பேகவுண்டன்புதுார், தாத்துார், வாழைக்கொம்பு நாகூர், பெரியபோது மற்றும் மாரப்பகவுண்டன்புதுார் ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கல்லுாரி யு.பி.ஏ., ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள், யு.பி.ஏ., வின் திட்டங்கள் மற்றும் அதன் பயன் குறித்து மக்களிடையே விளக்கிப் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் கவிதா, பாலாஜி விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

