தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நகர தி.மு.க. சார்பில் சைக்கிள் போட்டி

 நகர தி.மு.க. சார்பில் சைக்கிள் போட்டி

 நகர தி.மு.க. சார்பில் சைக்கிள் போட்டி


ADDED : ஜன 07, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு நகர தி.மு.க. சார்பில், பொங்கல் விழா, சமூக நீதிக்கான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சைக்கிள் போட்டி மகாலிங்கபுரத்தில் நடந்தது.

போட்டிகள், ஆறு முதல், 14 வயது, 15 - 20 வயது என்றும், பெரியவர்கள் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. நகர பொறியாளர் அணி அமைப்பாளர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா, மாணவ, மாணவியரிடம் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் குறித்தும், தமிழக அரசு வழங்கும் சேவைகள் குறித்தும் விளக்கியதுடன், போட்டியை துவக்கி வைத்தார்.

மகாலிங்கபுரத்தில் இருந்து வடக்கிப்பாளையம் பிரிவு மற்றும் புளியம்பட்டி வரை என எல்லை வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், வக்கீல் அதிபதி, கம்பன் கலை மன்றம் தலைவர் சண்முகம் ஆகியோர் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர். சைக்கிளிங் கிளப் நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us