/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கார் பார்க்கிங்' இடமாக மாறிய நகர்ப்புற நலவாழ்வு மையம்
/
'கார் பார்க்கிங்' இடமாக மாறிய நகர்ப்புற நலவாழ்வு மையம்
'கார் பார்க்கிங்' இடமாக மாறிய நகர்ப்புற நலவாழ்வு மையம்
'கார் பார்க்கிங்' இடமாக மாறிய நகர்ப்புற நலவாழ்வு மையம்
ADDED : ஆக 03, 2025 08:58 PM

வால்பாறை; வால்பாறை நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் முன் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2023ல் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த மையம் துவங்கப்பட்ட சில மாதங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள, நகர்ப்புற சுகாதார மையத்தின் முன்பாக விதிமுறையை மீறி சிலர் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வாழைத்தோட்டம் பகுதி மக்கள் வசதிக்காக துவங்கப்பட்ட சுகாதார மையத்தில் சிகிச்சை பெற நோயாளிகள் வந்து செல்ல முடியாத அளவுக்கு, சுற்றிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுகாதார மையத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
சுகாதார வளாகத்தில், 24 மணி நேரமும் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

