/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊதியக்குழு அமைக்க அரசுக்கு வலியுறுத்தல்
/
ஊதியக்குழு அமைக்க அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2025 09:41 PM
கிணத்துக்கடவு; தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய குழு அமைக்க வேண்டும், என, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள, கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு, 3, 5 மற்றும் 7 ஆண்டுகள் என பல்வேறு நிலைகளில் ஊதியம் மாற்றம் நடைமுறையில் உள்ளது.
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் வழங்குவது போல், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் வழங்கும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும்.
தற்போது, ரேஷன் கடை பணியாளர்களுக்கு, 4.5 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும், 6 மாதத்துக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். 6 மாதத்திற்கு பின் சட்டசபை தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், ஊராட்சி தேர்தல் உள்ளிட்டவைகள் நடந்து முடிந்து, 3 வருடங்கள் காலம் கழித்து புதிய ஊதியம் வழங்குவது என்பதற்கு, 7.5 ஆண்டுகள் ஆகிவிடும்.
எனவே, ஊதிய குழு அமைத்து ஊதியம் வழங்க வேண்டும். மேலும், இக்குழுவில் ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும், என, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.