/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டளிக்கும் உரிமையை பயன்படுத்த வலியுறுத்தல்
/
ஓட்டளிக்கும் உரிமையை பயன்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 25, 2025 11:07 PM

கோவை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, கோவை கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., ஷர்மிளா நேற்று துவக்கி வைத்தார்.
அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளை, டி.ஆர்.ஓ., கவுரவித்தார்.
அதன்பின், அவர் பேசுகையில், ''18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கட்டாயம் வாக்காளராக பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து வாக்காளர்களும் அவசியம் ஓட்டளித்து, உரிமையை பயன்படுத்த வேண்டும். ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு, சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கேடயம், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முன்னதாக, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஊர்வலத்தில், கல்லுாரி மாணவ, மாணவியர், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

