/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று மாவட்ட கோர்ட்களில் காலிப்பணியிடம்
/
மூன்று மாவட்ட கோர்ட்களில் காலிப்பணியிடம்
ADDED : பிப் 10, 2025 11:38 PM
கோவை; கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், 520 ஊழியர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களில், 1,250 க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றங்களில் மொத்தம், 26,119 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 21,714 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 4,400 ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கோவை, நீலகிரி, திருப்பூரில் மொத்தமுள்ள 2,461 பணியிடங்களில், 520 ஊழியர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. இவற்றில், கோவையில், 238, நீலகிரியில் 97, திருப்பூரில், 197 பணியிடம் காலியாக இருக்கிறது. நீதிமன்றங்களில் காலிப்பணியிடம் நிரப்பினால், ஊழியர்களுக்கான பணிச்சுமை குறையும்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில், மொத்தமுள்ள 1,374 நீதிபதிகள் பணிடங்களில், 1,040 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். 334 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள, 61 நீதிமன்றங்களில், ஒரு சில கோர்ட்களில் மட்டும் நீதிபதி பணியிடம் காலியாக இருக்கிறது.