/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
/
வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
வானதி கார் கண்ணாடி உடைப்பு; வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
ADDED : டிச 04, 2024 11:00 PM
கோவை; சட்டமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்னையில், வானதி சீனிவாசன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கு விசாரணை வரும், 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது, தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரங்கே கவுடர் வீதியில், வானதி சீனிவாசன் தலைமையில் பா.ஜ.,வினர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், அப்பகுதியில் அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆதிநாராயணன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் வாக்கு சேகரித்தனர்.
அப்போது இரு தரப்பினரிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்னையில் வானதி சீனிவாசன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பினரும், கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கோவை 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. இதன் வழக்கு நேற்று நடந்தது. பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன் ஆஜர் ஆனார்.
சம்பவம் குறித்து நீதிபதி சுஜித் முன்னிலையில் விளக்கம் அளித்தார். விளக்கத்தை கேட்டறிந்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.