/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சூழல், சித்தா குறித்து விழிப்புணர்வு : வாணவராயர் வேளாண் மாணவியருக்கு பயிற்சி
/
சுற்றுச்சூழல், சித்தா குறித்து விழிப்புணர்வு : வாணவராயர் வேளாண் மாணவியருக்கு பயிற்சி
சுற்றுச்சூழல், சித்தா குறித்து விழிப்புணர்வு : வாணவராயர் வேளாண் மாணவியருக்கு பயிற்சி
சுற்றுச்சூழல், சித்தா குறித்து விழிப்புணர்வு : வாணவராயர் வேளாண் மாணவியருக்கு பயிற்சி
UPDATED : டிச 25, 2025 08:12 AM
ADDED : டிச 25, 2025 06:13 AM

ஆனைமலை: ஆனைமலை அருகே, வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சித்தா மருத்துவம் குறித்து பயிற்சி பெற்றனர்.
ஆனைமலை அருகே, ஆழியாறு சின்னார்பதி பழங்குடியினர் குடியிருப்பில் நல்வழிகாட்டி அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலை - வாணவராயர் வேளாண் நிறுவனத்தில் இருந்து வந்த மாணவர்களுக்கு ஐந்து நாள் என்.ஜி.ஓ. இணைப்பு பயிற்சி நடக்கிறது.
அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது. நல்வழிகாட்டி அறக்கட்டளை நிறுவனர் அருண்பாலாஜி தலைமை வகித்தார்.சுற்றுச்சூழல் ஆர்வலர் பொறியாளர் லீலா, கதை சொல்லி, ஆவணப்பட இயக்குனர் கோவை சதாசிவம் ஆகியோர் பேசினர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் உண்மையான முக்கியத்துவம், காடுகளின் பங்கு, பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவு, இயற்கை பாதுகாப்பில் பழங்குடியினரும், உள்ளூர் மக்களும் வகிக்கும் முக்கிய பங்கு; பழங்குடி வாழ்க்கை மற்றும் பண்பாடு குறித்து விளக்கப்பட்டது.
மூலிகை பயன்பாடு வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை மற்றும் திருமூலர் மூலிகை பண்ணை ஆகியவற்றை வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர் பார்வையிட்டனர்.சித்த மருத்துவமனையின் செயல்பாடுகள், மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள், திருமூலர் மூலிகை பண்ணையில் வளர்க்கப்படும் மருத்துவ மூலிகைகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.
ஆயுஷ் மருத்துவ முறைகள், அதன் சிறப்புகள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உள் மருந்துகள், வெளி மருந்துகள்; அன்றாட சமையலறையில் பயன்படும் சுக்கு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்கள் மருந்தாக பயன்படும் விதம் குறித்து விளக்கப்பட்டது.
விஷ நாராயணி, பூனைமீசை, நெற்பவளம், ஆடாதோடைஉள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சித்தா டாக்டர் நல்லதம்பி, சித்தா மருத்துவம் குறித்து விளக்கினார். மருந்தாளுனர் அஜித்குமார் உடன் இருந்தார்.

