/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் வளர்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு
/
கோவில்களில் வளர்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED : மார் 15, 2024 10:59 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருத்திகை, வளர்பிறை சஷ்டி வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், கிருத்திகை, வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பாலமுருகனுக்கு, 16 வகையான அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், பங்குனி மாத கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுப்ரமணியருக்கு பால், பன்னீர், உட்பட 16 வகை திரவியங்களில் அபிேஷக பூஜை நடந்தது.
மாலையில், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வெள்ளித்தேர் வீதியுலா நடந்தது.
இதே போல், பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி உட்பட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

