/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டமலை ஆண்டவர் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது
/
வட்டமலை ஆண்டவர் கோவில் தேர்த்திருவிழா துவங்கியது
ADDED : மார் 19, 2024 10:37 PM
அன்னூர்:குமாரபாளையத்தில், 150 ஆண்டுகள் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள சுனை என்றும் வற்றாதது ஆகும். இங்கு 14ம் ஆண்டு பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா நேற்று துவங்கியது.
நேற்றுக்காலை மாகாளியம்மன் கோவிலில் கிராம தேவதை வழிபாடு நடந்தது. மாலையில் கிராம சாந்தி பூஜை நடந்தது. இதில் குமாரபாளையம், ஆலாம்பாளையம் மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 8:00 மணிக்கு கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம் நடக்கிறது. மாலையில், யாகசாலை பூஜையும், சுவாமி உட்பிரகார உலாவும் நடக்கிறது.
வருகிற 23ம் தேதி காலை யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் சாமி உலாவருதலும் நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 10:30 மணிக்கு மோள காளிபாளையம் பாலமுருகன் குழுவின் காவடி ஆட்டத்துடன் தேரோட்டம் துவங்குகிறது. சிரவை ஆதினம், குமரகுருபர சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். இரவு பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு பரிவேட்டை, கும்மியாட்டம், தெப்போற்சவம் நடக்கிறது.

