/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு வி.சி.க., திரும்ப பெற வேண்டும் சமூக நீதிக்கட்சி தலைவர் அறிவுறுத்தல்

ADDED : செப் 30, 2024 04:17 AM
கோவை :
'அருந்ததியர் அரசியல் உரிமை மீட்பு மாநாடு' கோவையில் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து, சமூக நீதிக்கட்சி மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு வழங்கிய, 3 சதவீதம் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சரி என்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அது, அருந்ததியர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
ஆகவே, திருமாவளவன் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை, திரும்ப பெற வேண்டும்.
உள் இட ஒதுக்கீடு குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது; மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக தவறானது. இது, மாநிலங்களின் உரிமைக்கு எதிரானது. எனவே இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரும்பப் பெற வேண்டும்.
அருந்ததியர் மக்கள் மத்தியில், தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சியின் துவக்கமாக டிச., 10ம் தேதி உலக மனித உரிமை நாளில், 'அருந்ததியர் அரசியல் உரிமை மீட்பு மாநாடு' கோவையில் நடத்த உள்ளோம்.
இதில், அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், பெரியாரிய இயக்கங்கள் தலைவர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.