ADDED : நவ 05, 2026 08:51 PM

கோவை: கூட்டுறவுத் துறை சார்பில் வெற்றி சிறப்புக் காய்கறிகள் தொகுப்பு விற்பனையை வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் கலெக்டர் பவன்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
கேரட், பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட 10 வகையான, 2.60 கிலோ எடையுள்ள காய்கறிகள் தொகுப்பு ரூ.100க்கு வழங்கப்படுகிறது. இருகூர், சூலூர், அன்னூர் உள்ளிட்ட 13 கூட்டுறவுக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வரும் 7ம் தேதி வரை விற்பனை நடைபெறும். நிகழ்ச்சியில், சூலூர் எம்.எல்.ஏ., சுகுமார், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் சுகுமார் அளித்த பேட்டியில், ''ஒரு பைல் திறந்ததற்கே தி.மு.க. ஆடிப்போய்விட்டது. இன்னும் வரிசையில் உள்ள பைல்களை திறந்தால் என்னாகும்? காலையில் இருந்து மாலை வரை அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் ஒரே முதல்வர் விஜய். மக்களே ஓராண்டு டைம் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.
