தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வியாபாரிகள் வருகை குறைவு: காய்கறிகள் விற்பனை மந்தம்

வியாபாரிகள் வருகை குறைவு: காய்கறிகள் விற்பனை மந்தம்

வியாபாரிகள் வருகை குறைவு: காய்கறிகள் விற்பனை மந்தம்


UPDATED : நவ 10, 2026 04:55 PM

ADDED : நவ 10, 2026 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 04:55 PM ADDED : நவ 10, 2026 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் வருகை குறைவாக இருந்த நிலையில், விற்பனையும் மந்தமாக இருந்தது.

கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) --- 300 தேங்காய் (ஒன்று) -- 28, கத்திரிக்காய் கிலோ - 56, முள்ளங்கி --- 48, முருங்கைக்காய் --- 30, வெண்டைக்காய் --- 40, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 12, பாகற்காய் --- 45, புடலை --- 30, சுரைக்காய் --- 20, பீர்க்கங்காய் --- 40, வெள்ளரிக்காய் --- 20, அவரைக்காய் --- 80, பீட்ரூட் --- 20 மற்றும் பச்சை மிளகாய் --- 35 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று கத்தரிக்காய் கிலோ - - 15, முள்ளங்கி -- 4 மற்றும் பச்சை மிளகாய் --- 5 ரூபாய் விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி (15 கிலோ) --- 180, தேங்காய் (ஒன்று) --- 2, முருங்கைக்காய் --- 40, வெண்டைக்காய் --- 25, அரசாணிக்காய் --- 3, பாகற்காய் --- 20, புடலை --- 5, சுரைக்காய் --- 10, பீர்க்கங்காய் --- 25, வெள்ளரிக்காய் --- 10, அவரைக்காய் --- 40 மற்றும் பீட்ரூட் --- 5 ரூபாய் விலை குறைந்தது.

வியாபாரிகள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் மார்க்கெட்டில் நேற்று வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. இதேபோன்று காய்கள் வரத்தும் எதிர்பார்த்த அளவில் இல்லை. விற்பனையும் மந்தமாக இருந்தது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us