/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கை தீவிரம்
/
முள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கை தீவிரம்
ADDED : ஜூலை 16, 2025 10:25 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கேரள மாநில எல்லையான முள்ளியில் வனத்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
கேரள வனப்பகுதிகளில் மாவோஸ்ட்டுகள், நடமாட்டம் உள்ளது. மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள மாநில எல்லை பகுதியான முள்ளியில் உள்ள வனச்சோதனைச்சாவடியில் வனத்துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் கூறுகையில், அத்திக்கடவு, பில்லூர், முள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்நியர்கள் நடமாட்டம், வேட்டை கும்பல்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என தீவிர ரோந்து மேற்கொண்டோம். பின், அப்பகுதியில் உள்ள பழங்குடியினரிடமும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினோம், என்றனர்.

