/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிரப்பள்ளிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை ;இரு மாநில சுற்றுலா பயணியர் பாதிப்பு
/
அதிரப்பள்ளிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை ;இரு மாநில சுற்றுலா பயணியர் பாதிப்பு
அதிரப்பள்ளிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை ;இரு மாநில சுற்றுலா பயணியர் பாதிப்பு
அதிரப்பள்ளிக்கு இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை ;இரு மாநில சுற்றுலா பயணியர் பாதிப்பு
ADDED : நவ 17, 2025 01:56 AM

வால்பாறை: அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால், இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில், அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.
இது தவிர வால்பாறையிலிருந்து, அதிரப்பள்ளி அருவி வழியாக சாலக்குடி, கொச்சி, கோழிக்கோடு, எர்ணாகுளம், சபரிமலை போன்ற பகுதிகளுக்கும், சுற்றுலாபயணியர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், யானைக்காயம் என்ற இடத்தில் கடந்த அக்., மாதம் ரோட்டில் மதகு (தடுப்பு சுவர்) திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இந்த ரோட்டில், கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் செல்ல, அம்மாநில அரசும் அனுமதி வழங்கியது.
ஆனால் ரோடு பணிக்காக, மரம் வெட்டுதல், கட்டுமான பணிக்காக வனத்துறையினரிடம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி பெறவில்லை. இதனால் ரோடு சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது .
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில் யானைக்காயம் அருகே கும்மட்டியில் ஒரு மதகு இடிந்து விழுந்ததால், ரோட்டில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரோடு சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளதால், இன்று(17ம் தேதி) முதல் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவிக்கு எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை.
'வால்பாறையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், மளுக்கப்பாறை சோதனை சாவடி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதே போல் அதிரப்பள்ளியிலிருந்து வால்பாறைக்கும் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி முழுமையாக நிறைவடைந்த பின் வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்' என்றனர்.
வாழச்சால் மாவட்ட வனத்துறை அதிகாரி சுரேஷ்பாபு கூறுகையில், ''ரோடு சீரமைக்கும் பணிக்காக மரம் வெட்டவும், கட்டுமான பொருட்கள், இயந்திரங்கள் கொண்டுவரவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி பெற்ற பின்னர், ரோடு பணி மீண்டும் துவங்கப்படும்'' என்றார்.

