/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 20, 2025 06:08 AM
கோவில்பாளையம் : காளிங்கராயன் குளத்தில் அனுமதி இன்றி மண் கடத்திய டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பாளையம் அருகே 125 ஏக்கர் பரப்பளவு காளிங்கராயன் குளம் உள்ளது. நள்ளிரவு நேரத்தில் அனுமதியின்றி குளத்திலிருந்து மண் கடத்துவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.குளம் வருவாய் ஆய்வாளர் சுகன்யா தலைமையில், வருவாய் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, கிராவல் மண் எடுத்து இரண்டு டிராக்டர்களில் நிரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு டிராக்டர்கள் இரண்டு யூனிட் கிராவல் மண்ணுடனும், பொக்லைன் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.
டிரைவர்கள் பீளமேடு விஜயன், 35, நாயக்கன்பாளையம் மூர்த்தி, 43, மகேந்திரன், 29 ஆகிய மூவர் மீதும் அனுமதியின்றி மண் எடுத்து கடத்தியதாக, போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.