/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைகட்டி ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்: பொதுமக்கள் அச்சம்
/
ஆனைகட்டி ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்: பொதுமக்கள் அச்சம்
ஆனைகட்டி ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்: பொதுமக்கள் அச்சம்
ஆனைகட்டி ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்: பொதுமக்கள் அச்சம்
ADDED : ஆக 10, 2025 10:28 PM

பெ.நா.பாளையம்:
கோவை ஆனைகட்டி ரோட்டில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்துள்ளன.
கோவை ஆனைகட்டி ரோட்டில் மாங்கரை மற்றும் ஆலமரமேடு, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் உருவாகியுள்ளன. இதில், பெரும்பாலான ரிசார்டுகளில் மதுபான பார், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர வசதிகள் உள்ளன.
இதனால் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆனைகட்டியில் உள்ள ரிசார்டுகளுக்கு சனி, ஞாயிறுகளில் வந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. விபத்துகளால் காயம், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தடாகம் வட்டார பொதுமக்கள் கூறுகையில், ' சனி, ஞாயிறுகளில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. வன விலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிதமான வேகத்துடன் செல்வது நல்லது. ஆங்காங்கே தடாகம் போலீசார் 'செக் போஸ்ட்' களை அமைத்து உரிய நடவடிக்கை எடுக் க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, தடாகம் போலீசார் கூறுகையில்,' குடிபோதையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, போதையில் உள்ளனரா என பரிசோதனை செய்யப்படுகிறது. போதையில் இருப்பது தெரியவந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கோவை மொபைல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின்னரே, அவர்களது வாகனம் விடுவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதத்தில், 100க்கும் மேற்பட்ட நபர்கள், குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் செலுத்தி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒப்புதலுடன் 'ஸ்பீடு பிரேக்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர, 24 மணி நேரமும் தடாகம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனைகட்டி முதல் பன்னிமடை வரை ரோந்து பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.