/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2025 09:42 PM
அன்னுார்; கி ராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வி தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, தேர்வு நிலையும், இருபது ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்கி, அரசாணை பிறப்பித்து, அதற்குரிய சம்பளம் வழங்க வேண்டும்.
பட்டா மாறுதல் பரிந்துரை தர கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அறிவுடை நம்பி தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். தாலுகா தலைவர் குமரன், செயலாளர் பாலச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.