/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் வரும் 16ல் விஷ்ணுபதி புண்ய கால பூஜை
/
கோவில்களில் வரும் 16ல் விஷ்ணுபதி புண்ய கால பூஜை
ADDED : நவ 14, 2024 04:20 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விஷ்ணுபதி புண்ய கால பூஜை வரும், 16ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வரும், 16ம் தேதி விஷ்ணுபதி புண்ய கால பூஜை நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு அபிேஷகம், காலை, 4:30 மணிக்கு யாக பூஜைகள் நடக்கிறது.
விஷ்ணுபதி புண்யா காலத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு முன் வைக்க வேண்டும்.
இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் மனதார வழிபட்டு நமது எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் பங்கேற்று வழிபட்டால் நிலம், வீடு வாங்க தயாாரின் அருள் பெற முடியும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலிலும் விஷ்ணுபதி புண்ய கால பூஜை நடக்கிறது. காலை, 4:30 மணிக்கு சுதர்சன ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து மதியம், 12 மணி வரையிலும், மாலை, 5:30 மணி முதல், இரவு, 7:30 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

