/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வ பாரத் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
/
விஸ்வ பாரத் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2024 05:56 AM

கோவை: அரசு வேலையில் இடஒதுக்கீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு தாலுகா அலுவலகம் எதிரே, விஸ்வகர்மா சமுதாய கட்சியும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, விஸ்வ பாரத் மக்கள் கட்சி தேசிய பொதுச்செயலாளர் பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். விஸ்வகர்மா சமுதாய பெண்கள் பெயரில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், ஐந்தொழில் பட்டறைகளுக்கு இலவச மின்சாரம், அரசு வேலையில், 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பாபுஜி சுவாமிகள் கூறுகையில், ''விஸ்வகர்மா சமுதாய மக்களின் தச்சு, இரும்பு, தங்கத் தொழில் என, பாரம்பரிய தொழில் இக்கட்டான சூழலில் காணப்படுகிறது. இந்நிலை மாற அரசு உதவ வேண்டும்,'' என்றார்.