/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் சேர்க்க முகாம்; இரண்டு நாட்கள் நடக்கிறது
/
வாக்காளர் சேர்க்க முகாம்; இரண்டு நாட்கள் நடக்கிறது
வாக்காளர் சேர்க்க முகாம்; இரண்டு நாட்கள் நடக்கிறது
வாக்காளர் சேர்க்க முகாம்; இரண்டு நாட்கள் நடக்கிறது
ADDED : நவ 15, 2024 11:29 PM
வால்பாறை; வால்பாறையில் உள்ள, 68 ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 68 ஓட்டுச்சாவடி மையங்களில் இன்று (16ம் தேதி); நாளை (17ம் தேதி) சிறப்பு முகாம் நடக்கிறது.முகாமில், வாக்காளர்கள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய உரிய படிவத்தினை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க, படிவம், '6 பி' வழங்க வேண்டும். வரும், 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டாவது கட்டமாக சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்கிறது.
முகாமில் வால்பாறை சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என, வால்பாறை தாசில்தார் சிவக்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.