sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுரிமை ஜனநாயகத்தை காக்கும் மிகப்பெரிய ஆயுதம் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு

/

ஓட்டுரிமை ஜனநாயகத்தை காக்கும் மிகப்பெரிய ஆயுதம் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு

ஓட்டுரிமை ஜனநாயகத்தை காக்கும் மிகப்பெரிய ஆயுதம் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு

ஓட்டுரிமை ஜனநாயகத்தை காக்கும் மிகப்பெரிய ஆயுதம் தேசிய வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வு


ADDED : ஜன 26, 2025 11:30 PM

Google News

ADDED : ஜன 26, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பொள்ளாச்சியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் ஜன., 25ம் தேதியை, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறது.வாக்காளர் பெயர் சேர்ப்பு, தேர்தலில் ஓட்டு போடுவதன் அவசியம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு, ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வாக்களிப்பது நமது கடமை என்பதையும், வாக்களிப்பது அனைவரின் உரிமை என்பதையும் உணர்த்தும் வகையில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓட்டுரிமை ஜனநாயகத்தை காக்கும் மிகப்பெரிய ஆயுதம் என, தெரிவிக்கப்பட்டது.

சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், பேரணியை துவக்கி வைத்தார். தாசில்தார் மேரி வினிதா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

நகராட்சி ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, அரசு கலைகல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று சப் - கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து, அனைவரும் வாக்காளர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். வரைபட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

*என்.ஜி.எம்., கல்லுாரி, நேருயுவகேந்திரா தன்னார்வலர் அமைப்பு சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணி, நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

*புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில், உறுதிமொழி எடுக்கப்பட்டது.மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில், 95 வயாதன ஜான்பீபியை, நேரில் சென்று சந்தித்து கவுரவித்தனர்.

* ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில், வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், புத்தகம் வழங்கப்பட்டது. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, மாசாணியம்மன் கோவில் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

* நா.மூ., சுங்கம் ராமு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவணர்களிடையே வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு வருவாய் துறை சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும் அக் ஷயா கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், வாக்காளர் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. தாசில்தார் கணேஷ் பாபு தலைமையில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் கைகளில் பதாகைகளை எந்திய படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உடுமலை


உடுமலையில், 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, உடுமலை சட்டசபை தொகுதியிலுள்ள, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். தாசில்தார் விவேகானந்தன், தேர்தல் பிரிவு தாசில்தார் சையது ராபியாம்மாள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

* உடுமலை அரசு கல்லுாரி, ஜி.வி.ஜி., மகளிர் கல்லுாரி, கமலம் கல்லுாரி, வித்யாசாகர் கல்லுாரிகளில், மாணவ, மாணவியருக்கு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், 'அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாவண்ணம், எந்த விதமான துாண்டுதலும் இல்லாமல், நேர்மையான முறையில் வாக்களிப்பேன்,' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், குட்டை திடலில் துவங்கி, பிரதான ரோடுகள் வழியாக, பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தது.

ஓட்டுரிமை விற்பனைக்கல்ல!

வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தனி தாசில்தார் மோகன்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு பேரணியில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்கள் அதற்கான படிவத்தை பெற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து, அடையாள அட்டை பெறலாம். ஓட்டுரிமையை ஒரு போதும் விற்பனை செய்யக்கூடாது. தேர்தலின் போது ஓட்டு போடுவதற்காக யாரிடரும் பணம் வாங்காமல் நேர்மையான முறையில் ஓட்டளிக்க வேண்டும், என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு வாசகங்களுடன் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக மாணவர்கள் பேரணியாக சென்றனர். தேர்தல் துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us