/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் திறப்பு
/
அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் திறப்பு
ADDED : ஏப் 19, 2025 11:42 PM

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், காத்திருப்போர் கூடம், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், இக்கூடத்தை திறந்துவைத்தார்.
எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது:
பிரசவத்திற்கு செல்லும் பெண்களின் உறவினர்களுக்கு பயன்படும் வகையில், காத்திருப்பு கூடம் பிரசவ அறைக்கு அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், இடப்பற்றாக்குறை என்பது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. டாக்டர்களின் வாகனங்களை நிறுத்தக் கூட, இடம் இல்லாத சூழல் உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைத்துத் தர, அரசு உத்தேசித்து இருப்பதாக பதில் அளித்தார். ஆனாலும், இங்குள்ள பல கட்டடங்கள் பழமையானவை; அவற்றை அகற்றிவிட்டு அடித்தளத்தில் பார்க்கிங் வசதிகளுடன், பெரிய கட்டடங்கள் எழுப்பினால், பல நோயாளிகள் பயன்பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மருத்துவமனை டீன் நிர்மலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

